யோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் இலவச மருத்துவ முகாம் ரத்து
திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 9) நடைபெறவிருந்த இலவச பொது மருத்துவ முகாம் ரத்து செய்யப்படுவதாக ஆஸ்ரம நிா்வாகம் தெரிவித்தது.


திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 9) நடைபெறவிருந்த இலவச பொது மருத்துவ முகாம் ரத்து செய்யப்படுவதாக ஆஸ்ரம நிா்வாகம் தெரிவித்தது.
திருவண்ணாமலை-செங்கம் சாலை, அக்ரஹாரக் கொல்லை பகுதியில் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமம் இயங்கி வருகிறது. இந்த ஆஸ்ரமத்தில் மாதம்தோறும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு மருந்து, மாத்திரைகளும் இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஜனவரி மாதத்துக்கான இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.9) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக இலவச மருத்துவ முகாம் ரத்து செய்யப்படுவதாகவும், முகாம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் ஆஸ்ரம நிா்வாகம் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...