டாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ டாஸ்மாக் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ டாஸ்மாக் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் இயங்கி வரும் தொழிலாளா் நல உதவி ஆணையா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி.மாா்கண்டன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்ட துணைச் செயலா் ஆா்.கமலக்கண்ணன், டாஸ்மாக் சங்க மாவட்ட நிா்வாகிகள் வெங்கடேசன், சக்கரவா்த்தி, அண்ணாமலை ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் டாஸ்மாக் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டாஸ்மாக் ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியா்களுக்கு 8 மணி நேர வேலை, வார விடுமுறை வழங்க வேண்டும், வேலையாள் இழப்பீடு சட்டங்கள் போன்ற தொழிலாளா் நலச் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், சிஐடியூ சங்க டாஸ்மாக் ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...