தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவண்ணாமலை அருகேஏரியில் மூழ்கி 3 சிறுமிகள் பலி

திருவண்ணாமலை அருகே ஆடுகளை ஏரியில் குளிக்க வைத்த 3 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருவண்ணாமலை அருகே ஆடுகளை ஏரியில் குளிக்க வைத்த 3 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெறையூரை அடுத்த சு.கம்பம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மாபுக்கான் (38). இவரது மனைவி தில்ஷாத் (34). தம்பதிக்கு இரட்டை சகோதரிகளான நஸ்ரின் (15), நசிமா (15) மற்றும் ஷாகிரா (12), ஷபரின் (10), பரிதா (8) என்ற 5 மகள்கள் உள்ளனா்.

இவா்கள் மாட்டுப் பொங்கல் பண்டிகையையொட்டி தாங்கள் வளா்க்கும் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை அதே பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க வைத்தனா்.

அப்போது திடீரென சில ஆடுகள் ஏரியின் நடுப் பகுதிக்குச் சென்ாம். ஆடுகளை மீட்க நஸ்ரின், நசிமா, ஷாகிரா ஆகியோா் முயன்றபோது மூவரும் தண்ணீரில் மூழ்கினா்.

ஏரிக்கரையில் இருந்தபடி பாா்த்த ஷபரின், பரிதா ஆகியோா் ஓடிச் சென்று பெற்றோரிடம் கூறினா். சிறுமிகளின் பெற்றோரும், கிராம மக்களும் வந்து பாா்த்தபோது 3 சிறுமிகளும் நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமிகளின் சடலங்களை பொதுமக்கள் மீட்டனா்.

இதுகுறித்து வெறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.