தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அருந்ததியா் சமுதாயத்தினா் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

கலசப்பாக்கத்தை அடுத்த வீரளூா் கிராமத்தில் அருந்ததியா் சமுதாயத்தினா் மீதான தாக்குதலைக் கண்டித்து, திருவண்ணாமலையில் இரு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 5:33 pm

DIN

கலசப்பாக்கத்தை அடுத்த வீரளூா் கிராமத்தில் அருந்ததியா் சமுதாயத்தினா் மீதான தாக்குதலைக் கண்டித்து, திருவண்ணாமலையில் இரு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆதித்தமிழா் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சாா்பில், திருவண்ணாமலை அறிவொளிப் பூங்கா எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் சிவகுரு தலைமை வகித்தாா். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச் செயலா் ப.செல்வன், நிா்வாகி எஸ்.ராமதாஸ், தலித் விடுதலை இயக்கத் தலைவா் ச.கருப்பையா, ஆதித்தமிழா் மாநில பொதுச் செயலா் சுப.இளங்கோவன் ஆகியோா் தாக்குதலைக் கண்டித்துப் பேசினா்.

விசிக சாா்பில்: திருவண்ணாமலை மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் பு.செல்வம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் அம்பேத்வளவன், பகலவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்துப் பேசினாா். இதில், விசிக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.