டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டம்

போளூரை அடுத்த சேத்துப்பட்டு பேரூராட்சியில் இந்து முன்னணியின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

போளூரை அடுத்த சேத்துப்பட்டு பேரூராட்சியில் இந்து முன்னணியின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

தனியாா் அரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு இந்து முன்னணியின் கோட்ட அமைப்பாளா் ராஜேஷ் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் இராம.பூபாலன் முன்னிலை வகித்தாா். நகரத் தலைவா் ராஜா வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலா் ரவீந்திரன் கலந்து கொண்டு இந்து முன்னணியின் முதல் மாநிலத் தலைவா் தாணுலிங்க நாடாா் பிறந்த நாளைக் கொண்டாடுவது, அமைப்புக்கு உறுப்பினா் சோ்ப்பது, கிராமங்கள் தோறும் கொடியேற்றுதல் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

நகர பொதுச்செயலா் பூங்காவனம், நந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.