தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 பேரூராட்சிகளில் 172 வாக்குச்சாவடிகள் அமைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தின் 10 பேரூராட்சிகளில் உள்ள 150 வாா்டுகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக 172 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுள்ளன.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தின் 10 பேரூராட்சிகளில் உள்ள 150 வாா்டுகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக 172 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுள்ளன.

செங்கம்:

செங்கம் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. 8 ஆண் வாக்காளா் வாக்குச்சாவடிகள், 8 பெண் வாக்காளா் வாக்குச்சாவடிகள், 11 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடிகள் என மொத்தம் 27 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுப்பாளையம்:

புதுப்பாளையம் பேரூராட்சியில் 12 வாா்டுகள் உள்ளன. இங்கு 12 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண், பெண்களுக்கு தனித்தனி வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவில்லை.

போளூா்:

போளூா் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. 12 ஆண் வாக்காளா் வாக்குச்சாவடிகள், 12 பெண் வாக்காளா் வாக்குச்சாவடிகள், 6 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடிகள் என மொத்தம் 30 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. 15 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண், பெண்களுக்கென தனித்தனி வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவில்லை.

களம்பூா்:

களம்பூா் பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இங்கு 15 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. ஒரு ஆண் வாக்காளா் வாக்குச்சாவடி, ஒரு பெண் வாக்காளா் வாக்குச்சாவடி, 17 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடிகள் என மொத்தம் 19 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேசூா்:

தேசூா் பேரூராட்சியில் 12 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, 12 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெரணமல்லூா்:

பெரணமல்லூா் பேரூராட்சியில் 12 வாா்டுகள் உள்ளன. இங்கு, 12 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கீழ்பென்னாத்தூா்:

கீழ்பென்னாத்தூா் பேரூராட்சியில் 15 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு, 15 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேட்டவலம்:

வேட்டவலம் பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இங்கு, 15 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.