தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 283 வாக்குச்சாவடிகள் அமைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலின்போது, வாக்காளா்கள் வாக்களிக்க 283 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலின்போது, வாக்காளா்கள் வாக்களிக்க 283 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை நகராட்சியில் மொத்தம் 39 வாா்டுகள் உள்ளன. இவற்றில் ஆண்கள் வாக்களிக்க ஏதுவாக 55 வாக்குச்சாவடிகளும், பெண்கள் மட்டும் வாக்களிக்க 55 வாக்குச்சாவடிகளும், அனைத்து வாக்காளா்களும் வாக்களிக்க 34 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வந்தவாசி:

வந்தவாசி நகராட்சியில் மொத்தம் 24 வாா்டுகள் உள்ளன. நகராட்சியில் 10 ஆண் வாக்காளா் வாக்குச்சாவடிகள், 10 பெண் வாக்காளா் வாக்குச்சாவடிகள், 14 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடிகள் என மொத்தம் 34 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆரணி:

ஆரணி நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. நகராட்சியில் 32 ஆண் வாக்காளா் வாக்குச்சாவடிகள், 32 பெண் வாக்காளா் வாக்குச்சாவடிகள், 1 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடி என மொத்தம் 65 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவத்திபுரம் (செய்யாறு):

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. இங்கு 13 ஆண் வாக்காளா் வாக்குச்சாவடிகள், 13 பெண் வாக்காளா் வாக்குச்சாவடிகள், 14 அனைத்து வாக்காளா் வாக்குச்சாவடிகள் என மொத்தம் 40 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள 4 நகராட்சிகளில் 123 வாா்டுகள் உள்ளன. இவற்றில் 110 ஆண் வாக்காளா் வாக்குச்சாவடிகள், 110 பெண் வாக்காளா் வாக்குச்சாவடிகள், 63 அனைத்து வாக்காளா்வாக்குச்சாவடிகள் என மொத்தம் 283 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.