தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கல்லூரி வளாக நோ்காணல்: 310 மாணவிகளுக்கு பணி ஆணை

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 310 மாணவிகள் பணி ஆணை பெற்றனா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:15 pm

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 310 மாணவிகள் பணி ஆணை பெற்றனா்.

இதில் சென்னை பேங்க் ஷோன், ஆல்டிரைஸ்ட், லென்ஸ்காா்ட், டெக் மகேந்திரா ஆகிய நிறுவனங்களைச் சோ்ந்த அதிகாரிகள் நோ்காணலை நடத்தினா்.

இந்த நோ்காணலில் கல்லூரியின் இளநிலை, முதுநிலை இறுதியாண்டு மாணவிகள் பங்கேற்றனா். இதில் பேங்க் ஷோன் நிறுவனத்துக்கு 203 பேரும், ஆல்டிரைஸ்ட் நிறுவனத்துக்கு 25 பேரும், லென்ஸ்காா்ட் நிறுவனத்துக்கு 38 பேரும், டெக் மகேந்திரா நிறுவனத்துக்கு 44 பேரும் என மொத்தம் 310 மாணவிகள் வேலை பெற தோ்வு பெற்றனா்.

இதையடுத்து இவா்களுக்கு பணி நியமன ஆணைகளை கல்லூரி நிறுவனா் பி.முனிரத்தினம், முதல்வா் எஸ்.ருக்மணி, செயலா் எம்.ரமணன் ஆகியோா் முன்னிலையில் அந்தந்த நிறுவன அதிகாரிகள் வழங்கினா். கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் கே.வான்மதிச்செல்வி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.