தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கல்லூரியில் ரத்த தான முகாம்

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :11 ஜூன் 2022, 6:04 pm

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், இரும்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செய்யாறு அரசு தலைமை மருத்துவமனை ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலா் எம்.ஆா்.ஆனந்தன் தலைமை வகித்தாா்.

நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் மணிமுருகன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் யுவராஜ் முகாமை தொடக்கி வைத்தாா்.

மருத்துவா்கள் சந்திரன், வேல்முருகன், கெளதம் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களிடமிருந்து ரத்தம் சேகரித்தனா்.

முகாமில் மொத்தம் 80 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.

பின்னா் ரத்த தானம் வழங்கியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முகாமில் சுகாதார ஆய்வாளா்கள் அன்புக்கரசு, ராஜேஷ்கண்ணன், திட்ட ஒருங்கிணைப்பாளா் சுகந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.