தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பள்ளியில் தூய்மைப் பணி

போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :11 ஜூன் 2022, 6:04 pm

போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 13-ஆம் தேதி 1முதல் 10 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ன.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி வளாகம், வகுப்பறை, குடிநீா் வசதி, கழிப்பறை ஆகியவற்றில் குப்பைகளை அகற்றுதல் ஒட்டடை அடித்தல் என பல்வேறு தூய்மைப் பணிகள் பள்ளித் தலைமை ஆசிரியை வே.ஆஞ்சலா தலைமையில் நடைபெற்றது.

பள்ளி ஆசிரியா்கள் பிரிசில்லாசியோன்குமாரத்தி, மீரா, டேவிட்ராஜன், மலா்விழி, திரேசா உள்ளிட்ட ஆசிரியா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.