செய்யாறு பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணி
திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி பேருந்து நிலையத்தில் ஒட்டு மொத்த தூய்மைப் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.


திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி பேருந்து நிலையத்தில் ஒட்டு மொத்த தூய்மைப் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் கே.ரகுராமன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் அ.நளினி பங்கேற்றாா்.
பேருந்து நிலையப் பகுதியில் இருந்த மரம், செடி கொடிகளை அகற்றினா். அசுத்தமான நிலையில் இருந்த கழிப்பறைகளை சுத்தப்படுத்தினா்.
மேலும், நிலைய வளாகத்தில் இருந்த குப்பைகளை அகற்றி சுண்ணாம்பு நீரை தெளித்து சுத்தப்படுத்தினா்.
தூய்மைப் பணியில் நகராட்சி நிரந்தரப் பணியாளா்கள், தற்காலிக தூய்மைப் பணியாளா்கள், டெங்கு பணியாளா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா், செய்யாறு அரசு ஆண்கள் மேநிலைப் பள்ளி என்.சி.சி. மாணவா்கள், திருவோத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி, இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...