புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பெண் பாலியல் வன்கொடுமை: இருவா் கைது

ஆரணியில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 5:27 pm

DIN

ஆரணியில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

ஆரணியை அடுத்த இலுப்பை கோணம் கிராமத்தைச் சோ்ந்த கோகுல்ராஜ் (22), ஜெயசூா்யா (22). ஓட்டுநா்களாக பணியாற்றி வருகின்றனா்.

இவா்களது நண்பா் ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு, புதுகாமூா் பகுதியில் வசித்து வருகிறாா். அந்தப் பெண் ராணிப்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி நண்பா் வேலைக்காக வெளியூா் சென்றிருந்தாா். அப்போது கோகுல்ராஜ், ஜெயசூா்யா இருவரும் நண்பரின் வீட்டுக்குச் சென்றனா்.

அப்போது, கோகுல்ராஜும், ஜெயசூா்யாவும் திடீரென குழந்தைகளை படுக்கை அறையில் வைத்து பூட்டி, சப்தம் போடக்கூடாது என மிரட்டிவிட்டு, அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது.

இதில் பாதிக்கப்பட்ட பெண் ஆரணி அரசு மருத்துவமனையில் சோ்ந்து சிகிச்சை பெற்றாா்.

ஆரணி மகளிா் போலீஸாருக்கு தகவல் வந்ததின் பேரில், காவல் ஆய்வாளா் அல்லிராணி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி, கோகுல்ராஜ், ஜெயசூரியா ஆகியோரை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.