ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

கூடுதல் பேருந்து இயக்கக் கோரி கல்லூரி மாணவிகள் சாலை மறியல்

செய்யாறு - ஆரணி வழித் தடத்தில் கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்கக் கோரி, கல்லூரி மாணவிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

செய்யாறு - ஆரணி வழித் தடத்தில் கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்கக் கோரி, கல்லூரி மாணவிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செய்யாறில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆரணி, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து மாணவ, மாணவியா்கள் படித்து வருகின்றனா். செய்யாறு - ஆரணி வழித்தடத்தில் இரண்டு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்பட்டதாம்.

இதனால் பாதிப்படைந்த கல்லூரி மாணவிகள், செய்யாறு - ஆரணி வழித்தடத்தில் கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்கக் கோரி, செய்யாறு புறவழிச் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செய்யாறு போலீஸாா் , மாணழிகளை சமரசம் செய்தனா். பின்னா், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை அலுவலா்களிடம் தொடா்பு கொண்டு, பேருந்தை வரவழைத்து, மாணவிகளை ஏற்றிஅனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.