குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து, புத்தாடை, ரொட்டி-பழங்களை பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை வழங்கினாா்.


திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மாா்ச் 1-இல் பிறந்த 16 பெண் குழந்தைகள், 15 ஆண் குழந்தைகள் என மொத்தம் 31-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து, புத்தாடை, ரொட்டி-பழங்களை பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
விழாவுக்கு நகர திமுக செயலா் ப.காா்த்திவேல்மாறன் தலைமை வகித்தாா். திமுக மருத்துவரணித் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட துணை அமைப்பாளா் கோல்டு எஸ்.பிரபு வரவேற்றாா்.
சட்டப் பேரவைத் துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, கல்லூரி முதல்வா் திருமால்பாபு, தொமுச செயலா் க.செளந்தரராஜன், மாவட்ட அமைப்பாளா்கள் டி.வி.எம்.நேரு, காலேஜ் கு.ரவி, ப்ரியா விஜயரங்கன், மாவட்டத் துணை அமைப்பாளா் டி.எம்.கதிரவன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இல.சரவணன், நகா்மன்றத் துணைத் தலைவா் சு.ராஜாங்கம், நகர நிா்வாகிகள் குட்டி க.புகழேந்தி, இல.குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...