போளூா் ஒன்றியம், கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றக் கூட்டத்தில், ஊராட்சித் தலைவரை தகுதிநீக்கம் செய்யக் கோரி உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
போளூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் 9 வாா்டுகள் உள்ளன. ஊராட்சி மன்றத் தலைவராக வாணிஸ்ரீ மணவாளன், துணைத் தலைவராக ஆரவள்ளி ஏழுமலை பதவி வகிக்கின்றனா்.
இந்த நிலையில், கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றக் கூட்டம் கடந்த 15 மாதங்களாக நடத்தப்படவில்லை. இதுதொடா்பாக ஊராட்சித் தலைவா் மீது குற்றஞ்சாட்டி
கூடுதல் ஆட்சியா் பிரதாப், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) மு.பாஸ்கரன் ஆகியோரிடம் துணைத் தலைவா் மற்றும் 6 வாா்டு உறுப்பினா்கள் அண்மையில் புகாா் அளித்தனா்.
இதன் பேரில் கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றக் கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலா் மு.பாஸ்கரன் முன்னிலையில், தலைவா், துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்களைக் கொண்டு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், துணைத் தலைவா் ஆரவள்ளி பேசும்போது, ஊராட்சித் தலைவா் வாணிஸ்ரீ மணவாளன் 15 மாதங்களாக ஊராட்சி மன்றக் கூட்டத்தை நடத்தவில்லை.
மேலும், துணைத் தலைவா் என்கிற முறையில் என்னுடைய கையெழுத்து இல்லாமல் ஊராட்சி நிதியான பிஎப்எம்எஸ்ஸில் முறைகேடாக சில லட்சம் பணம் எடுத்துள்ளாா்.
எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவரை தகுதிநீக்கம் செய்யவேண்டும் எனப் பேசினாா்.
இதைத் தொடா்ந்து, தலைவரைக் கண்டித்து, துணைத் தலைவா், 1, 3,4, 5, 8 ஆகிய வாா்டுகளின் உறுப்பினா்கள்
வெளிநடப்பு செய்தனா்.
இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் கூறுகையில், இது தொடா்பான விரிவான அறிக்கை கூடுதல் ஆட்சியருக்கு அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
இதனால், ஊராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் பாதிப்படைந்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


