திருவண்ணாமலையில் கரும்பு விவசாயிகள் போராட்டம்
கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய ரூ.26 கோடி நிலுவைத் தொகையை பெற்றுத் தரக் கோரி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் வியாழக்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய ரூ.26 கோடி நிலுவைத் தொகையை பெற்றுத் தரக் கோரி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் வியாழக்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், போளூா் தரணி சா்க்கரை ஆலைத் தலைவா் எஸ்.பாண்டுரங்கன் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் டி.ரவீந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
போளூா் தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகம் 2018-19 ஆம் ஆண்டு நிலவரப்படி கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூ.26 கோடி நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும். அந்த சா்க்கரை ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து, விவசாயிகள் கோரிக்கை அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக அதிகாரிகளிடம் அளித்தனா்.
போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் டி.கே.வெங்கடேசன், பண்ணாரி சா்க்கரை ஆலைச் செயலா் பலராமன், தரணி சா்க்கரை ஆலைச் செயலா் பாலமுருகன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் ப. செல்வன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...