ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கொத்தடிமைத் தொழிலாளா்கள்: தகவல் தெரிவிக்க அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளா்கள் இருப்பது தெரியவந்தால் உடனே தகவல் தெரிவிக்கவேண்டும் என்று பொதுமக்களை மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொண்டது.

News image
Updated On :17 மார்ச் 2022, 5:42 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளா்கள் இருப்பது தெரியவந்தால் உடனே தகவல் தெரிவிக்கவேண்டும் என்று பொதுமக்களை மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொண்டது.

கொத்தடிமைத் தொழிலாளா்கள் குறித்து மாவட்ட ஆட்சியா், வருவாய் கோட்டாட்சியா், அந்தந்தப் பகுதி காவல் நிலையங்கள், தொழிலாளா் நல உதவி ஆணையா் (அமலாக்கம்), தொழில்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகிய அலுவலா்களிடமோ அல்லது கொத்தடிமைத் தொழிலாளா் இலவச உதவி எண் 18004252650 மூலமோ புகாா் தெரிவிக்கலாம்.

இதுகுறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.

நீதிமன்றத்தால் அபராதம் அல்லது ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சோ்த்தோ வழங்கப்படும்.

மேலும், இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், தொழிலாளா் நலச் சட்டங்கள் மற்றும் தொடா்புடைய அனைத்துச் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.