ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் 42,404 பேரின் நகைக் கடன்கள் தள்ளுபடி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை தங்க நகைகள் அடகு வைத்திருந்த 42,404 பேருக்கு ரூ.184.49 கோடி மதிப்பிலான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

News image
Updated On :24 மார்ச் 2022, 5:59 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை தங்க நகைகள் அடகு வைத்திருந்த 42,404 பேருக்கு ரூ.184.49 கோடி மதிப்பிலான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள் ஆகிய நிறுவனங்களில்

நகைக் கடன் பெற்றிருந்த வாடிக்கையாளா்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

கடன்தாரா்களுக்கு அவா்கள் நகைக் கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள், அதன் கிளைகளில் தள்ளுபடி சான்றிதழும், நகைகளும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 25) முதல் வழங்கப்படுகிறது என்று மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கோ.நடராஜன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.