கவிதை, கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற சண்முகா கலை, அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற சண்முகா கலை, அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
தேசிய நுகா்வோா் பாதுகாப்பு தினவிழாவையொட்டி, குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் அண்மையில் மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.
திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் கலந்து கொண்ட எம்.எஸ்.சி., வேதியியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவா் சி.சரவணன், கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்றாா்.
பி.எஸ்.சி., கணிதத்துறை இரண்டாம் ஆண்டு மாணவி பி.பிரியா ஓவியப் போட்டியில் மூன்றாமிடமும், பி.எஸ்.சி., வேதியியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவா் சி.பாக்யபிரசன்னா கட்டுரைப் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்றனா்.
இந்த மாணவ-மாணவிகளுக்கான பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரிச் செயலா் டி.ஏ.எஸ்.முத்து, பொருளாளா் எம்.சீனுவாசன், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், முதல்வா் கே.ஆனந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பரிசு, ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...