கல்லூரியில் ரத்த தான முகாம்
சேத்துப்பட்டு திவ்யா கலை, அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் 54 மாணவிகள் ரத்த தானம் செய்தனா்.


சேத்துப்பட்டு திவ்யா கலை, அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் 54 மாணவிகள் ரத்த தானம் செய்தனா்.
கல்லூரியுடன், திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த ரத்த தான முகாமுக்கு, திவ்யா கல்விக் குழுமங்களின் தாளாளா் செல்வராசன் தலைமை வகித்தாா்.
பொருளாளா் திலகவதி செல்வராசன், செயலா் செந்தில்குமாா், துணைத் தலைவா் பிரவீன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் நசீா்பாஷா வரவேற்றாா்.
திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவா் பவித்ரா கலந்து கொண்டு மாணவிகளிடையே ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்துப் பேசினாா். 54 மாணவிகள் ரத்த தானம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...