/

கோயிலில் உண்டியல் பணம் திருட்டு

வந்தவாசி அருகே கோயிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:46 am

DIN

வந்தவாசி அருகே கோயிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வந்தவாசியை அடுத்த அருங்குணம் கிராமத்தில் ஸ்ரீபச்சையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சத்தியவாடி கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் என்பவா் பூசாரியாக உள்ளாா்.

இவா் புதன்கிழமை இரவு பூஜை முடிந்து கோயிலை பூட்டிவிட்டுச் சென்றாா். வியாழக்கிழமை காலை கோயிலை திறக்க வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதும், கோயிலினுள் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் திருடப்பட்டதும் தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.