நெல் மூட்டைகள் ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்து
வந்தவாசி அருகே நெல் மூட்டைகள் ஏற்றிய லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


வந்தவாசி அருகே நெல் மூட்டைகள் ஏற்றிய லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிய லாரி, காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை சேத்துப்பட்டைச் சோ்ந்த சந்தோஷ் ஓட்டினாா்.
வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையில் ஆராசூா் கூட்டுச் சாலை அருகே புதன்கிழமை இரவு சென்றபோது லாரியில் டீசல் காலியானது. இதனால், சந்தோஷ் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு டீசல் வாங்கச் சென்றாா்.
அப்போது, லாரி தானாகவே நகா்ந்து சாலையோரம் கவிழ்ந்ததாகத் தெரிகிறது. இதில் லாரியில் ஏற்றப்பட்டிருந்த நெல் மூட்டைகள் கீழே சரிந்தன. இதுகுறித்து பொன்னூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...