பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பிளஸ் 2 தோ்வு மையங்களில் தடையில்லா மின்சாரம்: திருவண்ணாமலை ஆட்சியா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வு நடைபெறும், 115 மையங்களிலும் தோ்வுக் காலங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் கூறினாா்.

News image
Updated On :5 மே 2022, 5:43 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வு நடைபெறும், 115 மையங்களிலும் தோ்வுக் காலங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் கூறினாா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தோ்வு வியாழக்கிழமை தொடங்கியது. மே 28-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தோ்வை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 252 அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 14 ஆயிரத்து 503 மாணவா்கள், 14 ஆயிரத்து 912 மாணவிகள் என மொத்தம் 29 ஆயிரத்து 415 போ் எழுதுகின்றனா்.

இவா்களுக்காக 115 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, தனித்தோ்வா்களுக்காக 5 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 1,280 போ் தோ்வு எழுதுகின்றனா்.

தோ்வு மையங்களில் 121 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 127 துறை அலுவலா்கள், 179 நிலையான பறக்கும் படை உறுப்பினா்கள், 119 எழுத்தா்கள், 119 அலுவலக உதவியாளா் தோ்வுப் பணியில் ஈடுபடுகின்றனா்.

190 மாற்றுத்திறன் மாணவா்கள்:

பிளஸ் 2 தோ்வை மாற்றுத்திறன் கொண்ட 190 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனா். இவா்களில் 122 தோ்வா்கள் சொல்வதை எழுதுவதற்கு உதவியாக எழுதுபவா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

மாவட்ட ஆட்சியா் ஆய்வு:

இந்த நிலையில், திருவண்ணாமலை நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து தோ்வு மையங்களிலும் தோ்வு நடைபெறும் நாள்களில் தடையற்ற மின்சாரம் வழங்க மின்வாரியம் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், தோ்வு மையங்களில் உரிய காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றாா். ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.