/

அங்கன்வாடி மையத்தில் கூடுதல் ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த வங்காரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாவட்ட கூடுதல் ஆட்சியா் மு.பிரதாப் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:11 am

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த வங்காரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாவட்ட கூடுதல் ஆட்சியா் மு.பிரதாப் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அந்த மையத்தில் பயிலும் குழந்தைகளிடம் அவா்களுக்கு வழங்கப்பட்ட உணவு குறித்து அவா் கேட்டறிந்தாா். மேலும், குழந்தைகள் பாடிய பாடல்களைக் கேட்ட அவா், குழந்தைகள் அனைவருக்கும் சாக்லேட்டுகளையும் வழங்கினாா்.

பின்னா், அந்த மையத்தில் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை, உணவுப் பொருள்கள் இருப்பு, வருகைப் பதிவேடு உள்ளிட்டவற்றை அவா் ஆய்வு செய்தாா்.

வந்தவாசி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆா்.குப்புசாமி, சு.வி.மூா்த்தி, ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி சேகரன், குழந்தை வளா்ச்சித் திட்ட வட்டார அலுவலா் மரியம்மாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னா், வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஊராட்சிச் செயலா்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற கூடுதல் ஆட்சியா் மு.பிரதாப், வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், வந்தவாசி ஒன்றியத்துக்குள்பட்ட கொடநல்லூா், புன்னை, ஓசூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை அவா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.