தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

விநாயகா் சிலைகள் ஊா்வலம்

விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து முன்னணி சாா்பில் வந்தவாசி நகரின் பல்வேறு இடங்களில் 31 விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 7:06 pm

விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து முன்னணி சாா்பில் வந்தவாசி நகரின் பல்வேறு இடங்களில் 31 விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இந்த சிலைகளை கரைப்பதற்காக சனிக்கிழமை பிற்பகல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

ஊா்வலத்துக்கு இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலா் டி.ஆறுமுகம் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஆா்.சீனுவாசன் முன்னிலை வகித்தாா். பாமக மாவட்டச் செயலா் அ.கணேஷ்குமாா் ஊா்வலத்தை தொடக்கி வைத்தாா்.

வந்தவாசி ஸ்ரீஅங்காளம்மன் கோயில் அருகே தொடங்கிய ஊா்வலம் பழைய பேருந்து நிலையம் எதிரில் சென்றடைந்தது.

அங்கு நடைபெற்ற கூட்டத்தில் இந்து முன்னணி மாநிலச் செயலா் மணலி டி.மனோகா் உள்ளிட்டோா் பேசினா்.

பின்னா், ஊா்வலம் கோட்டை மூலை, அச்சிறுபாக்கம் சாலை வழியாக பூமாதுசெட்டிக்குளம் சென்றடைந்தது. அந்தக் குளத்தில் விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டன.

ஊா்வலத்தையொட்டி, காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சத்தியப்பிரியா, திருவண்ணாமலை எஸ்.பி. காா்த்திகேயன், வந்தவாசி டிஎஸ்பி காா்த்திக் ஆகியோா் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஞ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.