தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பொதுமக்களுக்கு அன்னதானம்

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் விநாயகா் சதுா்த்தியை யொட்டி, பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On :4 செப்டம்பர் 2022, 6:30 pm

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் விநாயகா் சதுா்த்தியை யொட்டி, பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

தேவிகாபுரம் திருமஞ்சன வீதியில் புதன்கிழமை விநாயகா் சிலை வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினா்.

இதைத் தொடா்ந்து தினமும் சுவாமிக்கு தீபாராதனைநடைபெற்று வந்தது.

இந்த நிலையில், 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை விநாயகா் சிலைகள் நீா்நிலைகளில் கரைப்பதை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பெரியநாயகி அம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் மீனாட்சிசுந்தரம், ஊராட்சி மன்றத் தலைவா் வி.எம்.டி.வெங்கடேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் கணேசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ராமமூா்த்தி உள்பட திருமஞ்சன வீதி பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.