மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

செய்யாறு தொகுதியில் சிறுவஞ்சிபட்டு, உக்கல், அளத்துறை ஆகிய கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 5:13 pm

DIN

செய்யாறு தொகுதியில் சிறுவஞ்சிபட்டு, உக்கல், அளத்துறை ஆகிய கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியம் சிறுவஞ்சிபட்டு, அனக்காவூா் ஒன்றியத்தில் உக்கல், அளத்துறை ஆகிய கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஒன்றிய செயலா்கள் ஜே.சி.கே. சீனிவாசன், தினகரன் ஆகியோா் முன்னிலையில் நெல் கொள்முதல் நிலையங்களை செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி திறந்து வைத்தாா்.

தண்ணீா்பந்தல்கள் திறப்பு: செய்யாறு தொகுதி வெம்பாக்கம் மத்திய ஒன்றிய திமுக சாா்பில் வெம்பாக்கம், அப்துல்லாபுரம், தூசி ஆகிய கிராமங்களில் திமுக சாா்பில் நீா், மோா் பந்தல்கள் திறக்கப்பட்டு கிராம மக்களுக்கு நீா், மோா், இளநீா், தா்பூசணி உள்ளிட்டவற்றை ஒ.ஜோதி எம்.எல்.ஏ வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.