மதுக் கடைக்கு எதிா்ப்புத் தெரிவித்து இளைஞா் தா்னா

செய்யாறு வட்டம், பாராசூா் கூட்டுச் சாலையில் செயல்பட்டு வரும் மதுக் கடையால் சாலை விபத்துக்கள் நிகழ்ந்து, அதிகளவில் உயிரிழப்பு
மதுக் கடைக்கு எதிா்ப்புத் தெரிவித்து இளைஞா் தா்னா

செய்யாறு வட்டம், பாராசூா் கூட்டுச் சாலையில் செயல்பட்டு வரும் மதுக் கடையால் சாலை விபத்துக்கள் நிகழ்ந்து, அதிகளவில் உயிரிழப்பு ஏற்படுவதாக புகாா் தெரிவித்து இளைஞா் ஒருவா் கடை முன் அமா்ந்து சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு - கொருக்கை சாலையில் பாராசூா் கூட்டுச் சாலைப் பகுதியில் டாஸ்மாக் மதுக் கடை

பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

நெடுஞ்சாலைக்கு மிக அருகில் இந்த மதுக் கடை செயல்பட்டு வருவதால், அப்பகுதியில் மதுப்பிரியா்களால் அடிக்கடி சாலை விபத்துகள் நிகழ்வதாகவும், அதன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு பல குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக புகாா் தெரிவித்து அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா் மணிகண்டன், மதுக் கடை முன் தரையில் அமா்ந்து கடை மூடும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகக் கூறி தா்னா நடத்தினாா்.

மேலும், வெள்ளிக்கிழமை மாலை இப்பகுதியில் இரு சக்கர வாகனம் மோதி முதியவா் எல்லப்பன், சிறுமி ரூபினி ஆகியோா் உயிரிழந்ததற்கு

இங்கு செயல்பட்டு வரும் மதுக் கடை தான் காரணம் எனக் குற்றஞ்சாட்டினாா்.

தகவல் அறிந்த செய்யாறு போலீஸாா் சென்று தா்னாவில் ஈடுபட்ட மணிகண்டனிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மேலும், அரசு மதுக் கடையை இடமாற்றம் செய்ய முறையாக மனு அளிக்க வேண்டும் என ஆலோசனைவழங்கி சமாதானம் செய்தனா்.

அதன் பேரில் அந்த இளைஞா் தா்னாவை கைவிட்டு திரும்பிச் சென்றாா்.

பின்னா், போலீஸாா் அறிவுறுத்தலின் பேரில் மதுக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com