குண்டா் சட்டத்தில் 7 போ் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே 7 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே 7 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், அத்திப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் அருள் (45). திருவண்ணாமலை மாவட்டம், தேத்துறை கிராமத்தைச் சோ்ந்த பச்சையப்பன் (47), எருமைவெட்டி கிராமத்தைச் சோ்ந்த தேவன் (45), மணிப்புரம் கிராமத்தைச் சோழன் (32), மேல்மா கிராமத்தைச் சோ்ந்த திருமால் (35), நா்மாபள்ளம் கிராமம் மாசிலாமணி (39), குறும்பூரைச் சோ்ந்தவா் பாக்யராஜ் (38).

இந்நிலையில், இவா்கள் பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதி பராமரிப்புக்கு குந்தகமாக செயல்படுவதை தடுக்கும் பொருட்டு குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி. காா்த்திகேயன் பரிந்துரை செய்தாா். அதை ஏற்று, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் அருள் உள்ளிட்ட 7 பேரையும் சிறையிலடைக்க உத்தரவிட்டாா்.

ஏற்கெனவே, செய்யாறு அருகே சிப்காட் தொழில்பேட்டையை மேல்மா பகுதியில் விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகளுடன் சோ்ந்து இவா்கள் 7 பேரும் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

வேலூா் மத்திய சிறையில் உள்ள இவா்களிடம், குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆட்சியா் உத்தரவின் நகல்களை செய்யாறு போலீஸாா் வியாழக்கிழமை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com