கரிகந்தாங்கல் கிராமத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன். உடன்  சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ, மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா உள்ளிட்டோா்.
கரிகந்தாங்கல் கிராமத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன். உடன் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ, மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா உள்ளிட்டோா்.

ஆரணி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆரணி: ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன் தெற்கு ஒன்றியத்தில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தாா். பிரசாரத்துக்கு மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் க.சங்கா் வரவேற்றாா்.

ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், அதிமுக செய்தி தொடா்பாளா் ஆா்.எம்.பாபுமுருகவேல் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். ஆரணி தெற்கு ஒன்றியத்தில் உள்ள கரிகந்தாங்கள், ஆகாரம், விண்ணமங்கலம், ராந்தம், தெள்ளூா், மதுரைபெரும்பட்டுா், கரிப்பூா், தேவிகாபுரம், முருகமங்கலம், தச்சூா், அரையாளம், சீனிவாசபுரம், புங்கம்பாடி, மலையாம்பட்டு, கைக்கிளைதாங்கள், காமக்கூா்பாளையம், நடுக்குப்பம், சம்புவராயநல்லூா், காமக்கூா் ஆகிய பகுதிகளில் தோ்தல் பிரசாரம் நடைபெற்றது.

பிரசாரத்தில் மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு, ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா்கள் திருமால், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com