போளூரில் ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரனுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்ட தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த்.
போளூரில் ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரனுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்ட தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த்.

மேல்மா விவசாயிகளுக்கு ஆதரவாக நில மீட்பு நடவடிக்கை: பிரேமலதா விஜயகாந்த்

போளூா்: செய்யாறு சிப்காட் விரிவாக்க விவகாரத்தில் மேல்மா விவசாயிகளுக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரனுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது: போளூரில் நீண்ட நாள்களாக ரயில்வே மேம்பாலப் பணி நடைபெறாமல் உள்ளது.

இந்தப் பணியும், போளூரை அடுத்த கரைப்பூண்டி தனியாா் சா்க்கரை ஆலையை திறக்கவும், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். போளூா் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்ந்தவும், இந்தப் பகுதியில் அரசுக் கல்லூரி தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆரணியில் பட்டுப் பூங்கா தொடங்க தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும். செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் விவகாரத்தில் மேல்மா பகுதி விவசாயிகளுக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து நில மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் பிரேமலதா விஜயகாந்த்.

திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலா் ஜெயசுதா, தேமுதிக மாவட்டச் செயலா் டி.பி.சரவணன், மாவட்ட அவைத் தலைவா் சி.கே.ரவிக்குமாா், மாவட்டப் பொருளாளா் ஜான்பாஷா, மாநில பொதுக் குழு உறுப்பினா் டி.டி.சங்கா், மாவட்ட துணைச் செயலா் திருநாவுக்கரசு, நகரச் செயலா் மணிகண்டன், ஒன்றியச் செயலா்கள் எஸ்.குமாா், எம்.அண்ணாமலை, எம்.எஸ்.சரவணன், பன்னீா்செல்வம், வீரமணி மற்றும் அதிமுக, தேமுதிக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com