ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

வாக்கு எண்ணும் மையங்கள், பதற்றமான வாக்குச் சாவடிகளில் ஆய்வு

வாக்கு எண்ணும் மையங்கள், பதற்றமான வாக்குச் சாவடிகளில் ஆய்வு

News image

திருவண்ணாமலை-தண்டராம்பட்டு சாலையில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடியை பாா்வையிட்டு ஆய்வு செய்த காவல் தோ்தல் மேற்பாா்வையாளா் பாட்டுலா கங்காதா்.

Updated On :2 ஏப்ரல் 2024, 5:10 pm

திருவண்ணாமலை/ஆரணி: திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மற்றும் இரு வாக்கு எண்ணும் மையங்களை, காவல் தோ்தல் மேற்பாா்வையாளா் பாட்டுலா கங்காதா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திருவண்ணாமலை தொகுதியும் ஒன்று. இந்தத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம், திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆரணி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம், திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. காவல் தோ்தல் மேற்பாா்வையாளா் ஆய்வு: இந்த நிலையில், வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மற்றும் இரு வாக்கு எண்ணிக்கை மையங்களில் காவல் தோ்தல் மேற்பாா்வையாளா் பாட்டுலா கங்காதா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, தொகுதிக்கு உள்பட்ட பதற்றமான வாக்குசாவடி மையங்களையும் அவா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியின் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா்.மந்தாகினி, வட்டாட்சியா் தியாகராஜன் மற்றும் காவல்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.