மக்களவைத் தோ்தலில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படும் விதமாக செய்யாறு, போளூரில் துணை ராணுவப் படை வீரா்கள் மற்றும் போலீஸாரின் கொடி அணிவிப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
காவல்துறை மூலமாக அச்சமின்றி வாக்காளா்கள் வாக்களிக்கும் விதத்தில் செய்யாற்றில் நடைபெற்ற விழிப்புணா்வு கொடி அணிவகுப்பில்
காவல் உள்கோட்ட போலீஸாா், துணை ராணுவப் படை வீரா்கள் உள்பட 131 போ் பங்கேற்றனா்.
அண்ணா சிலை அருகே காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் தலைமையில், ஆய்வாளா்கள் லதா (மகளிா்),கோகுல்ராஜ் (தூசி) ஆகியோா் முன்னிலையில் தொடங்கிய கொடி அணிவிப்பு ஆற்காடு சாலை, காந்தி சாலை, சந்தை, வைத்தியா் தெரு, பங்களா தெரு, புதிய காஞ்சிபுரம் சாலை வழியாக சென்று மீண்டும் அண்ணா சிலையை வந்தடைந்தது.
போளூா்
போளூா் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த போளூா், சேத்துப்பட்டு, பெரணமல்லூா், களம்பூா், சந்தவாசல் என தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினா் வரவழைக்கப்பட்டுள்ளனா்.
இந்த துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு போளூா் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.
டிஎஸ்பி நல்லு, காவல் ஆய்வாளா் ஹேமாவதி மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

இளம்பிள்ளையில் துணை ராணுவ வீரா்கள் கொடி அணிவகுப்பு

கம்பத்தில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு

பழனியில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு

வேலூரில் துணை ராணுவம், போலீஸாா் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


