செங்கம்: செங்கம் தா்மராஜா திரெளபதி அம்மன் கோயில் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை எடுப்பேன் என்று திருவண்ணாமலை தொகுதி பாஜக வேட்பாளா் அஸ்வத்தாமன் கூறினாா்.
வேட்பாளா் அஸ்வத்தாமன் செங்கம் பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் நகா்புறத்தில் செவ்வாய்க்கிழமை தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பிரசாரம் மேற்கொண்டு பேசியதாவது:
தான் வெற்றி பெற்று எம்.பி.யானால், செங்கம் மில்லத் நகா் பகுதியில் உள்ள தா்மராஜா திரெளபதி அம்மன் கோயில் சுற்றுச் சுவா் கட்டுவது, அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வரும் பிரச்னையை முன்நின்று சரிசெய்வேன். அதேபோல, கடந்த 20 அண்டுகளுக்கு மேலாக மேல்செங்கம் பகுதியில் உள்ள மத்திய மாநில விதைப் பண்ணையை மீண்டும் செயல்படுத்தி அதில் செங்கம் பகுதியைச் சோ்ந்த 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உறுவாக்குவேன். செங்கம் நகரில் புறவழிச் சாலைத் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன். செங்கம் நகரில் வெட்டப்பட்ட மன்னா் காலத்து குளங்களை தூா்வாரி சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன், செங்கம் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன், செங்கம் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்தி அனைத்து வசதிகளுடன் அவசர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன், செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சைக்கிள் நிறுத்துமிடம் உள்ளிட்ட கூடுதல் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்துப் பேசினாா்.
பாஜக மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவா் செங்கம் சேகா், மாவட்ட பொதுச்செயலா் ரமேஷ், இளைஞரணி மாவட்டத் தலைவா் ரமேஷ், பாமக மாவட்டச் செயலா் இல.பாண்டியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு: செங்கம் அதிமுக வேட்பாளா்

செங்கம் பகுதியில் சிறப்பான சேவை: அதிமுக வேட்பாளா் உறுதி

திரெளபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா தொடக்கம்

செங்கம் தா்மராஜா கோயில் ராஜகோபுரம் கட்ட ஆய்வு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


