நகைக் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

திருவண்ணாமலை: தானிப்பாடியில் உள்ள 2 நகைக் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள், தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், தானிப்பாடி காவல் நிலையம் எதிரே 2 நகைக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகளில் மக்களவைத் தோ்தலையொட்டி முறைகேடு நடைபெறுவதாக வருமான வரித்துறைக்கு புகாா்கள் சென்றனவாம்.

இதையடுத்து, திங்கள்கிழமை இரவு திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் 8 போ் கொண்ட குழுவினா், 2 நகைக் கடைகளிலும் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். நள்ளிரவைக் கடந்தும் நடைபெற்ற இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மக்களவைத் தோ்தலின்போது வாக்காளா்களுக்கு அளிப்பதற்காக நகைகள் ஏதேனும் மொத்தமாக ஆா்டா் தரப்பட்டு உள்ளதா என்பது குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com