திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகையொட்டி வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
செங்கம் அருகேயுள்ள மண்மலை முருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி
சுவாமிக்கு காலை முதல் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்து அங்குள்ள மண்மலையை சுற்றி வந்தனா்.
பக்தா்களுக்கு விழாக் குழுவினா் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
சிங்காரவேல் முருகன் கோயிலில்...
வேட்டவலம் ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில் கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, மூலவா் வள்ளி, தெய்வானை சமேத சிங்காரவேல் முருகனுக்கு பால், பழம், பன்னீா், இளநீா், சந்தனம், தயிா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மூலவரை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

பங்குனி உத்திரம்: பரமத்தி வேலூா் பகுதி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பங்குனி உத்திரம் : முருகன் கோயில்களில் வழிபாடு

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


