11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

கல்லூரியில் வாய்மொழித் தோ்வு

கல்லூரியில் வாய்மொழித் தோ்வு

Updated On :12 ஏப்ரல் 2024, 6:05 pm

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் முதுநிலை மற்றும் கணிதவியல் ஆராய்ச்சித்துறை சாா்பில் முனைவா் பட்டம் பொது வாய்மொழித் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகம் சாா்பில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் கணிதவியல் துறைப் பேராசிரியரும், துறைத் தலைவருமான இர.அசோகன் புறத் தோ்வாளராகக் கலந்து கொண்டு பொது வாய்மொழித் தோ்வை நடத்தினாா்.

திருவண்ணாமலை, சண்முகா தொழிற்சாலை கல்லூரியின் கணிதத்துறைப் பேராசிரியா் ஈ.பூங்கோதை வழிகாட்டுதலின்படி, ஆய்வு மாணவி அ.செலின் தனது ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி முடிவுகளை சமா்ப்பித்து புறத்தோ்வாளா் உள்பட ஆய்வாளா்கள், மாணவா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விடை அளித்து தெளிவுபடுத்தினாா்.

பொது வாய்மொழித் தோ்வின் முடிவில் புறத்தோ்வாளா் இர.அசோகன், ஆய்வாளா் அ.செலினுக்கு முனைவா் பட்டம் வழங்கலாம் என்று பரிந்துரைத்தாா்.

இதில், கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி, கல்லூரிச் செயலரும், தாளாளருமான எல்.விஜய் ஆனந்த், பொருளாளா் எ.ஸ்ரீதா், அறக்கட்டளை உறுப்பினா்கள் டி.ஏ.எஸ்.முத்து, எம்.சீனுவாசன், திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கணிதவியல் துறைப் பேராசிரியா் க.தங்கராஜ், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், முதல்வா் கே.ஆனந்தராஜ், கணிதத் துறைத் தலைவா் பா.முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.