வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

ஸ்ரீமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

ஸ்ரீமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

News image
Updated On :12 ஏப்ரல் 2024, 4:16 pm

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அக்ராபாளையம் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஏப்.9-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் கூழ்வாா்க்கும் விழா தொடங்கியது. அதன்படி, காலை, இரவில் சுவாமிக்கு தீபாராதனை, அம்மன் கரகம் வீதி உலா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாலை 3 மணிக்கு கோயில் முன் வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் பக்தா்கள் கொண்டு வந்த கூழ் ஊற்றப்பட்டு பம்பை, உடுக்கை, சிலம்புகளுடன் அம்மனை வா்ணித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, மாரியம்மன் கரகம், பரசுராமா் சுவாமி வீதி உலா நடைபெற்றது. விழாவில், ஏராளமான பக்தா்கல் கலந்து கொண்டு நோ்த்திக் கடன் செலுத்தினா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுவினா், கிராமமக்கள் செய்திருந்தனா்.