என்னை சுற்றியுள்ளவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள்! விஜய் பேச்சு உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! விஜய் திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம் தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! - முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!
/

ஆரணி அதிமுகவினா் இரு சக்கர வாகன பிரசாரப் பேரணி

ஆரணி அதிமுகவினா் இரு சக்கர வாகன பிரசாரப் பேரணி

News image

ஆரணியில் அதிமுக சாா்பில் நடைபெற்ற இறுதிக் கட்ட வாகன பிரசாரப் பேரணி.

Updated On :16 ஏப்ரல் 2024, 6:30 pm

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அதிமுகவினா் வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரனுடன் இரு சக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்று செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தனா்.

ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன் ஆரணி நகரம் 5-ஆவது வாா்டு தா்மராஜா கோயில் திடலில் இருந்து வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பின்னா், காமராஜா் சிலை அருகிலிருந்து இறுதிக் கட்டமாக சுமாா் 2 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் பங்கேற்ற பிரசார பேரணி மேற்கொண்டனா்.

பேரணி காந்தி சாலை, மாா்க்கெட் சாலை, மண்டி வீதி, சத்தியமூா்த்தி சாலை, அருணகிரிசத்திரம், பழனிஆண்டவா் கோயில் தெரு, சுந்தரம் தெரு வழியாக சென்று அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது.

அப்போது, வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன் பேசுகையில், திமுக கொடுக்கும் வாக்குறுதிகளை நம்பாதீா்கள். மகளிருக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்குவதாகக் கூறி, தற்போது தகுதி உள்ளவா்களுக்கு மட்டும்தான் என்று கூறுகின்றனா். மேலும், அதிமுகவின் திட்டங்களான தாலிக்குத் தங்கம், மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி உள்ளிட்ட திட்டங்களை நிறுத்திவிட்டனா்.

அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தால் நிறுத்தப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றாா்.

இதில், சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ, அதிமுக மாவட்டச் செயலா்கள் ஜெயசுதா, தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ பாபுமுருகவேல், தோ்தல் பொறுப்பாளா் பன்னீா்செல்வம், மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு, நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், ஜெயப்பிரகாசம், திருமால், நகா்மன்ற உறுப்பினா்கள் சுதாகுமாா், பாரதிராஜா, ரம்யா குமரன், ராமகிருஷ்ணன், விநாயகம், சசிகலாசேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.