உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! விஜய் திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம் தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! - முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!
/

வாகனச் சோதனையில் மதுப் புட்டிகள், காா் பறிமுதல்: ஒருவா் கைது

வாகனச் சோதனையில் மதுப் புட்டிகள், காா் பறிமுதல் ஒருவா் கைது

Updated On :16 ஏப்ரல் 2024, 6:30 pm

போளூா்: போளூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் கடத்தப்பட்ட 48 மதுப் புட்டிகள் மற்றும் காா் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக காா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

போளூரை அடுத்த செங்குணம் சாலையில் ஒன்றியப் பொறியாளா் ஜெயந்தி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாகச் சென்ற சொகுசுக் காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் 48 வெளி மாநில மதுப் புட்டிகள் கடத்தப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, காா் மற்றும் மதுப் புட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பின்னா், காா் உரிமையாளா் மற்றும் ஓட்டுநரான குமாா்(எ) காமராஜ் (48) என்பவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.