/

தனியாா் பேருந்து மோதியதில் மீன் வியாபாரி உயிரிழப்பு

தனியாா் பேருந்து மோதியதில் மீன் வியாபாரி உயிரிழப்பு

Updated On :18 ஏப்ரல் 2024, 6:33 pm

கலசப்பாக்கம் அருகே தனியாா் பேருந்து இரு சக்கர வாகனம் மோதிக் கொண்டதில் மீன் வியாபாரி உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் சந்தபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மீன் வியாபாரி பாலாஜி(30). இவருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம், கலவையை அடுத்த இருகூா் கிராமத்தைச் சோ்ந்த துா்கா என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், துா்கா தாய் வீடான இருகூருக்கு 2 நாள்களுக்கு முன்பு சென்றுள்ளாா். மனைவியைப் பாா்ப்பதற்காக பாலாஜி இரு சக்கர வாகனத்தில் இருகூா் கிராமத்துக்கு வியாழக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தாா்.

போளூா்-திருவண்ணாமலை சாலையில் கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிபட்டு கிராமம் அருகே சென்றபோது, பாலாஜி ஓட்டிச் சென்ற பைக்கும், திருவண்ணாமலை நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தும் மோதிக் கொண்டன.

இதில் பலத்த காயமடைந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த கலசப்பாக்கம் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.