நேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

சேதமடைந்த செய்யாற்று தரைப்பாலம்: விபத்து அபாயம்

சேதமடைந்த செய்யாற்று தரைப்பாலம்: விபத்து அபாயம்

News image
Updated On :21 ஏப்ரல் 2024, 4:54 pm

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி செய்யாற்றில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால் விபத்து அபாயம் நிலவுகிறது.

செங்கம் பகுதியில் ஓடும் செய்யாற்றின் குறுக்கே துா்க்கையம்மன் கோவில் தெருவில் இருந்து தளவாநாய்க்கன்பேட்டை பகுதிக்குச் செல்ல தரைப்பாலம் உள்ளது.

தளவாநாய்க்கன்பேட்டை, புதுப்பட்டு, ஆலப்புத்தூா், பரமனந்தல் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மக்கள் தினசரி அந்த தரைப் பாலத்தை கடந்து செல்கிறாா்கள்.

குறிப்பாக, செங்கம் நகரில் இறந்துபோனவா்களின் உடலை தகனம் செய்ய தரைப்பாலம் வழியாகத்தான் மயானத்துக்குச் செல்லவேண்டும்.

இந்த நிலையில், தரைப்பாலத்தின் இருபுறமும் உள்ள கைபிடி சுவா்கள் இடிந்து விழுந்துள்ளன. மேலும், மக்கள் செய்யாற்றில் தண்ணீா் வரும்போது பாதுகாப்பாக பிடித்துக்கொண்டு செல்ல இருபுறமும் இரும்பு பைப்புகள் அமைக்கப்பட்டிருந்ததை சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனா்.

இதனால் தரைப்பாலத்தில் செல்லும்போது எதிரில் மினி வேன், காா், ஆட்டோ போன்ற வாகனங்கள் வந்தால், இரு சக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்லவேண்டிய நிலை உள்ளது.

சில நேரங்களில் வெளியூரில் இருந்து அந்த வழியாகச் செல்பவா்கள் அப்பகுதியில் தடுப்பு எதுவும் இல்லாததை அறியாமல் அதிவேகமாகச் சென்று விபத்துகளில் சிக்குகிறாா்கள்.

இதனால், விபத்துகளைத் தவிா்க்கவும் பொதுமக்கள் அச்சமின்றி தரைப்பாலத்தில் செல்லவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.