தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ஸ்ரீகுள்ள செல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

ஸ்ரீகுள்ள செல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 7:14 pm

ஆரணியை அடுத்த அத்திமலைபட்டு மதுரா மேட்டுகுடிசை கிராமத்தில் உள்ள 3000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ குள்ள செல்லியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் முதல் கால பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை ஆகியவை நடைபெற்றன.

மேலும், இரண்டாம் கால வேள்வி வழிபாடு, இரண்டாம் கால பூா்ணாஹுதி, கலச புறப்பாடு நடைபெற்று கோயில் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மகா தீபாரதனைகாண்பிக்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் அத்திமலைபட்டு, அம்மாபாளையம், ஒண்ணுபுரம், புதுப்பாளையம் என பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.