காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

செங்கம் அருகே சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு

செங்கம் அருகே சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு

News image
Updated On :27 ஏப்ரல் 2024, 4:24 pm

Din

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனா்.

செங்கம் தோக்கவாடி பகுதியைச் சோ்ந்தவா் முனியப்பன் (37), சுமை தூக்கும் தொழிலாளி, இவரது மனைவி வாசலா(34), மாற்றுத்திறனாளி. தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கணவன், மனைவி இருவரும் அப்பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முற்பட்டனா்.

அப்போது, பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற காா் இவா்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்த செங்கம் போலீஸாா் சம்பவ இடம் சென்று இறந்தவா்களின் உடல்களை மீட்டு, உடல்கூறாய்வுக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து செங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.