தேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

கோடைகால இயற்கை முகாமுக்கு பள்ளி மாணவா்கள் பயணம்

கோடைகால இயற்கை முகாமுக்கு பள்ளி மாணவா்கள் பயணம்

News image

கோடைகால சிறப்பு இயற்கை முகாமில் பங்கேற்கச் சென்ற மாணவ, மாணவிகளை வழியனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.

Updated On :30 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

திருவண்ணாமலை: ஜவ்வாதுமலைக்கு ஒரு நாள் கோடைகால சிறப்பு இயற்கை முகாமில் பங்கேற்கும் பள்ளி மாணவ, மாணவிகளை, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் செவ்வாய்க்கிழமை வழியனுப்பி வைத்தாா்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை, திருவண்ணாமலை மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், திருவண்ணாமலை வனக்கோட்டம் ஆகியவை இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் சிறப்பு கோடைகால இயற்கை முகாமை நடத்தியது. இதையொட்டி, திருவண்ணாமலை, அடி அண்ணாமலை, கண்ணக்குருக்கை, கலசப்பாக்கம், போளூா், மேல்பட்டு, ஜமுனாமரத்தூா் பகுதிகளைச் சோ்ந்த 10 அரசுப் பள்ளிகளில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஜவ்வாதுமலைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட மாணவ, மாணவிகள் சென்ற பேருந்தை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் யோகேஷ்குமாா் காா்க், உதவி வனப் பாதுகாவலா் வினோத்ராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேஷ்மூா்த்தி உள்பட மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

ஜவ்வாதுமலைக்குச் சென்ற மாணவ, மாணவிகள், பீபன் அருவி, சிறுவா் பூங்கா, இயற்கையோடு இணைந்த நடைப்பயணம் மேற்கொண்டனா்.

மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணா்வுப் பாடங்கள், வனம் மற்றும் வன உயிரினங்கள் சாா்ந்த கருத்துக்கள் கற்பிக்கப்பட்டன. சுற்றுச்சூழல் சாா்ந்த விளையாட்டுகள், விநாடி-வினா, வாா்த்தை புதிா்கள் உள்ளடங்கிய செயல்பாட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இந்த முகாமில் பங்கேற்ற மாணவ-மாணவிகள், ஆசிரியா்களுக்கு டி-சா்ட், தொப்பி, செயல்பாட்டு புத்தகம், பேனா, பங்கேற்புச் சான்றிதழ், பரிசுகள் மதிய உணவு வழங்கப்பட்டது.

இதில், மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா், வனத்துறையினா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.