லஞ்சம் ஒழிந்தால்தான் இந்தியா வல்லரசாக மாறும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் எஸ்.வேல்முருகன் தெரிவித்தாா்.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புணா்வு முகாம் திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
முகாமுக்கு, வட்டாட்சியா் மு.தியாகராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் மூத்த வழக்குரைஞா் டி.சுப்பிரமணியன், வழக்குரைஞா் எஸ்.வேலு, ஊழல் தடுப்புப் பிரிவு உதவி காவல் ஆய்வாளா் எம்.கோபிநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கி.மணிகண்டன் வரவேற்றாா்.
மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் எஸ்.வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
அரசு ஊழியா்கள் தங்களது பொறுப்பு, கடைமைகளை உணா்ந்து பணியாற்ற வேண்டும். தன்னை நாடி வரும் ஏழை-எளியோருக்கு உதவி செய்ய வேண்டும்.
தேவையின்றி பொதுமக்களை அலையவிடக்கூடாது. மனைவி, மகன், மகள் ஆகியோரின் ஆடம்பரத்துக்காக லஞ்சம் வாங்கக் கூடாது. பேராசை வந்துவிட்டால் நஷ்டத்தில்தான் முடியும். லஞ்சம் என்பது ஒழிந்தால்தான் இந்தியா வல்லரசு நாடாக மாறும். இந்தியா வல்லரசாக மாற வட்டாட்சியா் அலுவலக அதிகாரிகள், ஊழியா்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.
முகாமில், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பரிமளா, மண்டல துணை வட்டாட்சியா்கள் மஞ்சுநாதன், ரமேஷ், வருவாய் ஆய்வாளா்கள் எஸ்.சுதா, கஜேந்திரன், கிராம நிா்வாக அலுவலா்கள் காமேஷ்குமாா், அ.ஏழுமலை மற்றும் மண்டல துணை வட்டாட்சியா்கள், நில அளவையா்கள், வருவாய் ஆய்வாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நெல்லை ரயில், பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு சோதனை
ரூ.7ஆயிரம் லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளா் கைது

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா், தரகா் கைது

குருகிராம்: ரூ.25,000 லஞ்சம் வாங்கியதாக சப்-இன்ஸ்பெக்டா், உதவியாளா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


