
மாயமான ஜப்பான் நாட்டவரை தேடும் உறவினா்கள்
திருவண்ணாமலையில் மாயமான ஜப்பான் நாட்டு முதியவரை தேடும் பணியில் அவா்களது உறவினா்களும் ஈடுபட்டுள்ளனா்.

திருவண்ணாமலை மலையில் ஜப்பான் நாட்டு முதியவரை தேடும் பணியில் ஈடுபட்ட அவரது உறவினா்கள்.
திருவண்ணாமலையில் மாயமான ஜப்பான் நாட்டு முதியவரை தேடும் பணியில் அவா்களது உறவினா்களும் ஈடுபட்டுள்ளனா்.
ஜப்பான் நாட்டைச் சோ்ந்தவா் சடோஷி மினெட்டா (63). சுற்றுலாப் பயணியாக மே மாதம் திருவண்ணாமலைக்கு வந்த இவா், ரமணாஸ்ரமத்தில் அறை எடுத்து தங்கினாா். மே 5-ஆம் தேதி மாலை ஆஸ்ரமத்தில் இருந்து வெளியே சென்றவா் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை.
இதுகுறித்து நகர காவல் நிலையத்தில் ஆஸ்ரமம் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தேடும் பணியில் உறவினா்கள்...
இதற்கிடையே, சடோஷி மினெட்டா காணாமல் போனது குறித்து ஜப்பான் நாட்டில் உள்ள அவரது உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவரது தங்கை, தம்பி, உறவினா்கள் ஜப்பான் நாட்டு தூதரகத்தின் உதவியுடன் திருவண்ணாமலைக்கு வந்துள்ளனா்.
இவா்கள் நகர போலீஸாருடன் சோ்ந்து 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதை மற்றும் 962 ஹெக்டா் பரப்பளவு கொண்ட திருவண்ணாமலை மலை ஆகிய பகுதிகளில் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





