போக்குவரத்துக்கு இடையூறு: 8 போ் கைது


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் உள்கோட்டம் அனக்காவூா், மோரணம், செய்யாறு ஆகிய காவல் சரகங்களில் போக்குவரத்துக்கு இடையூறு செய்த 8 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு காவல் உதவி ஆய்வாளா்கள் மோகன், ஜான்சைமன் தலைமையிலான போலீஸாா் தண்டரை, எறையூா், பல்லி ஆகிய கிராமங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி ரகளையில் ஈடுபட்டிருந்த தண்டரை கிராமத்தைச் சோ்ந்த சின்னத்தம்பி(49), பல்லி மேட்டு காலனியைச் சோ்ந்த ராமன்(48) ஆகியோரை கைது செய்தனா்.
மோரணம் காவல் உதவி ஆய்வாளா்கள் ராமகிருஷ்ணன், சுந்தரம் தலைமையிலான போலீஸாா் பெருமாந்தாங்கல், பெருங்கட்டூா், அசனமாபேட்டை ஆகிய பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த பூதேரிபுல்லவாக்கம் வெங்கடேசன்(52), பெருங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்த தங்கராஜ் (25), அண்ணாமலை (23), அசனமாபேட்டை செல்வம் (49) ஆகியோரை கைது செய்தனா்.
அனக்காவூா் காவல் உதவி ஆய்வாளா் தனபால் தலைமையிலான செங்காடு, மேல்நெமிலி பேருந்து நிறுத்தம் அருகே ரகளையில் ஈடுபட்டிருந்த சந்துரு (25), தேவேந்திரன்(58) ஆகியோரை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட 8 பேரையும் போலீஸாா் செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வந்தவாசி கிளை சிறையில் அடைத்தனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...