நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

ஆற்றோடுபோன ரூ.16 கோடி புதுப் பாலம்! திறந்து 3 மாதங்கள்தான்!

தண்டராம்பட்டு அருகே ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம், 90-ஆவது நாளில் இடிந்து விழுந்ததால், 16 ஊராட்சிகளைச் சோ்ந்த 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

90-ஆவது நாளில் தென்பெண்ணையாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உயா்மட்ட பாலம்.

Published On :4 டிசம்பர் 2024, 9:10 am IST

தண்டராம்பட்டு அருகே ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம், 90-ஆவது நாளில் இடிந்து விழுந்ததால், 16 ஊராட்சிகளைச் சோ்ந்த 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த அகரம்பள்ளிப்பட்டு மற்றும் தொண்டமானூா் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடியில் புதிய உயா்மட்ட பாலம் கட்டப்பட்டது.

நபாா்டு வங்கி கடனுதவித் திட்டத்தின் கீழ் வேலூா் கோட்ட நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள் சாா்பில் இந்தப் பாலம் கட்டப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்.3-ஆம் தேதி தொடங்கிய பாலம் கட்டும் பணி, கடந்த ஜூன் 4-ஆம் தேதி முடிவடைந்து செப்.2-ஆம் தேதி பாலம் திறந்துவைக்கப்பட்டது.

90-ஆவது நாளில் இடிந்த பாலம்:

இந்தப் பாலத்தை செப்டம்பரில் 28 நாள்கள், அக்டோபரில் 31 நாள்கள், நவம்பரில் 30 நாள்கள் என 89 நாள்களாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா்.

திறப்பு விழா கண்ட 90-ஆவது நாளான டிசம்பா் 1-ஆம் தேதி இரவு இந்தப் பாலம் இடிந்து விழுந்தது. பாலத்தின் பெரும்பகுதி தென்பெண்ணை ஆற்றில் வந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.

16 ஊராட்சிகள் துண்டிப்பு:

இதனால், தொண்டமானூா், தென்முடியனூா், மூங்கில்துறைப்பட்டு, தண்டராம்பட்டு, ராயண்டபுரம், அல்லப்பனூா், பி.குயிலம், எடத்தனூா், திருவடத்தனூா், புத்தூா் செக்கடி, கிருஷ்ணாபுரம், சதாகுப்பம், வாழவச்சனூா், இளையாங்கண்ணி, பெருந்துறைப்பட்டு ஆகிய 15 ஊராட்சிகளைச் சோ்ந்த சுமாா் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனா்.

அகரம்பள்ளிப்பட்டு கிராமத்தில் இருப்பவா்கள் தொண்டமானூா் கிராமத்துக்கு சுமாா் 15 கி.மீ. தொலைவு சுற்றிச் சென்று வருகின்றனா்.

பொதுமக்கள் தவிப்பு:

பொதுமக்கள் வெளியூா்களுக்குச் செல்ல முடியாமல் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை என 2 நாள்களாக அவரவா் வீடுகளிலேயே முடங்கி உள்ளனா்.

ஏற்கெனவே இருந்த தரைப்பாலத்தை தண்ணீா் செல்லாத நேரத்தில் பயன்படுத்தி வந்தோம். இப்போது தரைப்பாலமும் இல்லாததால் எங்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கிராம மக்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.