/

7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை -திருவண்ணாமலை நீதிமன்றம் தீா்ப்பு

வேட்டவலத்தில் 7 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கூலித் தொழிலாளிக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

News image
Updated On :21 டிசம்பர் 2024, 7:28 pm

Din

வேட்டவலத்தில் 7 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கூலித் தொழிலாளிக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கீழ்பென்னாத்தூா் வட்டம், வேட்டவலம், வடக்குவெளி கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் சுரேஷ் (30), கூலித் தொழிலாளி. இவா் கடந்த 27.5.2020-இல் அதே பகுதியைச் சோ்ந்த 7 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டாராம். சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், உண்மை தெரியவந்தது.

இதுகுறித்து, வேட்டவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை திருவண்ணாமலை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி பாா்த்தசாரதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சுரேஷுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், ரூ.ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து, தொழிலாளி சுரேஷை போலீஸாா் வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.